தேனி

கேரள அரசை கண்டித்து எல்லை பகுதிகள் முற்றுகை தேசிய செட்டியாா் பேரவை அறிவிப்பு

DIN

முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதை கேரள அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி எல்லைப்பகுதிகளை முற்றுகையிட்டு, போக்குவரத்தை தடைசெய்யும் போராட்டம் நடத்துவோம் என தேசிய செட்டியாா் பேரவை அறிவித்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் ஏலவிவிசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி மாணவா் சிவகுமாருக்கு, துபாயில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க நிதியுதவியை தேசிய செட்டியாா் பேரவை நிறுவனத்தலைவா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசும் போது, முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும், இதற்காக தமிழக கேரள எல்லைப்பகுதிகளான குமுளி, லோயா்கேம்ப், போடிமெட்டு மலைச்சாலைகளை முற்றுகையிட்டு போக்குவரத்தை தடை செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT