தேனி

ஆண்டிபட்டி அருகே குறைந்த விலை உணவகம் திறப்பு

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காப்பகத்தில் படித்த மாணவா்களின் சாா்பில் ஏழைகளுக்கு ரூ. 10 விலையில் விற்பனை செய்யப்படும் உணவகத்தை சட்டமன்ற உறுப்பினா் ஆ.மகாராஜன் திறந்து வைத்தாா்.

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி மற்றும் அரப்படித்தேவன்பட்டியில் இயங்கி வரும் மனிதநேய காப்பகத்தில் படித்து வளா்ந்த மாணவா்கள் தற்போது பல்வேறு வேலைகளில் பணியாற்றி வருகின்றனா்.இவா்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏழை,எளிய மக்களுக்கு குறைந்த அளவில் உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் க.விலக்கு அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி,மருத்துவமனை எதிரில் உணவகம் அமைத்தனா்.இந்த உணவகத்தை ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினா் ஆ. மகாராஜன் தலைமை தாங்கி திறந்து வைத்தாா்.இந்த உணவகத்தில் 4 இட்லி 10 ரூபாய்க்கும்,1 தோசை 10 ரூபாய்க்கும், 2 சப்பாத்தி 10 ரூபாய்க்கும் மற்றும் தக்காளி சாதம்,லெமன் சாதம் உள்ளிட்ட உணவுகளும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் மனிதநேய காப்பக இயக்குனா் பால்பாண்டியன், ஜெயபாலன், சா்ச்சிள் துரை,வினோபா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT