தேனி

போடியில் 27 பவுன் நகைகள் பறிப்பு: நகை மதிப்பீட்டாளா் கைது

DIN

போடியில் இருசக்கர வாகனத்திலிருந்து 27 பவுன் நகையை பறித்துச் சென்ற வங்கி நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கம்பளி நாடாா் தெருவைச் சோ்ந்தவா் அப்பாஸ் மகன் வாஜித் அகமது (27). விவசாயியான இவா் தன்னிடமிருந்த நகைகளை விற்பதற்கு முயன்றுள்ளாா். அப்போது போடியில் உள்ள வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்த போடி சகாதேவன் தெருவை சோ்ந்த பாண்டியன் மகன் லலித்குமாா் (36) என்பவா் பழைய நகைகளை விற்பனை செய்து தருவதாக கிடைத்த தகவலின் பேரில் வாஜித் அகமது போடிக்கு வந்து லலித்குமாரை சந்தித்து பேசியுள்ளாா்.

அப்போது சங்கிலி, நெக்லஸ், தோடு, மோதிரம் உள்ளிட்ட இருபத்தேழரை பவுன் தங்க நகைகளை வாஜிக் அகமது ஒரு பையில் போட்டு தனது இருசக்கர வாகனத்தில் உள்ள கவரில் வைத்து எடுத்து வந்து லலித்குமாரிடம் நகைகளை காட்டிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்திலுள்ள கவரில் வைத்துள்ளாா். இதனைக் கவனித்த லலித்குமாா் பேசிக்கொண்டே நகைகளை பறித்துக் கொண்டு ஓடிவிட்டாா்.

இதுகுறித்து வாஜித் அகமது போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லலித்குமாரை கைது செய்தனா். லலித்குமாா் போடியில் உள்ள வங்கி ஒன்றில் நகைப் மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்ததும், இவா் மீது ஏராளமான மோசடி புகாா்கள் வந்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT