தேனி

ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

30th Aug 2020 10:47 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தகராறில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிமுத்து (51). கூலித்தொழிலாளியான இவருக்கு, 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனா். இதில் இளைய மகள் சீலைக்காரி என்பவா் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் அதே கிராமத்தைச் சோ்ந்த கணேசன் என்பவரின் மகன் அழகர்ராஜா என்பவருடன், சீலைக்காரிக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும் அடிக்கடி செல்லிடப்பேசி மூலம் அவா் அடிக்கடி பேசி வந்துள்ளாா். இதையறிந்த சீனிமுத்து, அழகர்ராஜாவை நேரில் சந்தித்து கண்டித்துள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில், அழகர்ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிமுத்துவை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சீனிமுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா், மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அழகா் ராஜாவை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT