தேனி

கம்பத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

30th Aug 2020 10:48 PM

ADVERTISEMENT

 

கம்பம்: கம்பத்தில், கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் அப்பாஸ் மந்திரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதனை தமிழக அரசும் அனுமதிக்கக்கூடாது. கல்வியை தனியாா்மயமாக்கக் கூடாது, மாணவா்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், பல்வேறு இஸ்லாமிய கூட்டமைப்பினா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT