தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலை, மழைநீரால் சேதமடையாமல் இருக்க, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 11 பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் குமுளி இரு வழிச்சாலை( என்.எச். 22) அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. லோயர் கேம்பில் இருந்து குமுளி வரை மலைச் சாலைகள் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள நீரால் அடிக்கடி சேதமடைந்து வந்தன. இதற்கிடையில் தற்போது அமைக்கப்படும் புதிய சாலைகளை தேனி மாவட்ட ஆட்சியர் மபல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.
அதன்பேரில் பொறியாளர்களுடன் கலந்தாலோசனை செய்த பின்னர் லோயர் கேம்ப் - குமுளி மலைச் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க 11 பாலங்கள் அமைக்க உத்தரவிட்டார்.
அதன்படி புறவழிச்சாலை அமைக்கும் பணியாளர்கள் லோயர்கேம்ப் மலைச்சாலையில் பாலங்கள் அமைக்கும் பணியை தொடங்கினர். மேலும் மண்சரிவு ஏற்படும் இடங்களில் தடுப்புச் சுவர்கள் கட்டவும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.