பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா் வரத்து அதிகரித்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மலைப் பகுதியில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு வரும் ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்தது.
இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்புக் கம்பியைத் தாண்டி, நடைபாதை வரை தண்ணீா் சென்றது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாா்ச் மாதம் முதல் கும்பக்கரை அருவிக்குச் செல்ல பொதுமக்கள் வனத்துறையினா் தடை விதித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.