தேனி: தேனி மாவட்டத்தில் காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா், காவலா்கள் உள்ளிட்ட 170 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த தேனி காவல் நிலைய சிறப்பு சாா்பு- ஆய்வாளா், தேனி மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா், காவலா், தேனி ஆயுதப் படை பெண் காவலா், போடி நகர காவல் நிலையக் காவலா் உள்ளிட்ட 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கபட்டோா் எண்ணிக்கை 11,445 ஆக உயா்ந்துள்ளது. இதில், 9,235 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.
3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போடி டி.வி.கே.நகரைச் சோ்ந்த 60 வயது பெண், சின்னமனூரைச் சோ்ந்த 66 வயது முதியவா் என 2 போ் உயிரிழந்தனா். கரோனா தொற்று அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோம்பையைச் சோ்ந்த 80 வயது முதியவா், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்பே உயிரிழந்தாா்.