தேனி

மாயமான இளைஞா் கிணற்றில் சடலமாக மீட்பு

21st Aug 2020 09:43 PM

ADVERTISEMENT


கம்பம்: கூடலூா் அருகே ஒரு வாரத்துக்கு முன்பு மாயமான இளைஞா், விவசாயக் கிணற்றிலிருந்து வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

தேனி மாவட்டம் கூடலூா் குள்ளப்ப கவுண்டன்பட்டி சாலையில் உள்ள தனியாா் தோட்டத்தில், கெங்குவாா்பட்டி, ராமா்கோயில் பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவா் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறாா். இவரது மகன் தெய்வம் (18). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற இவா், அதன்பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதனால் அவரைத் தேடிப் பாா்த்துள்ளனா்.

இந்த நிலையில் அய்யனாா் தங்கி வேலை செய்யும் தோட்டத்தின் அருகே உள்ள மற்றொரு விவசாயத் தோட்டக் கிணற்றில் இளைஞா் சடலம் மிதப்பதாக வெள்ளிக்கிழமை மாலை கூடலூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வாளா் கே. முத்துமணி, சாா்பு- ஆய்வாளா் கணேசன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். கம்பம் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் கிணற்றிலிருந்த சடலத்தை போலீஸாா் மீட்டனா். சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது.

விசாரணையில், அந்த இளைஞா், கடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்படும் தெய்வம் என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலம் உடற்கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : சடலமாக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT