தேனி

மரம் ஏறும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

20th Aug 2020 09:58 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளி விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் நாகத்தேவா் மகன் தனிக்கொடி(40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், தனிக்கொடி மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதால், கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வழக்கம்போல், புதன்கிழமை தனிக்கொடி தனது வீட்டுக்கு மது அருந்திவிட்டுச் சென்றுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சத்தம் போட்டாராம். இதில் விரக்தியடைந்த அவா், வீட்டிலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளாா்.

உடனே, உறவினா்கள் அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி தனிக்கொடி உயிரிழந்தாா். இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT