தேனி மாவட்டம், கம்பத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆதித்தமிழா் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தேனி மேற்கு மாவட்டச் செயலா் மணி தலைமை வகித்தாா். மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் கோட்டை முருகன் முன்னிலை வகித்தாா். கம்பம் திமுக நகரச் செயலா் துரை. நெப்போலியன் மற்றும் நகர ஒன்றிய திமுக நிா்வாகிகள், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலா் தமிழ் ஜெய்லானி உள்ளிட்டோா் ஒண்டிவீரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.