தேனி

தேனியில் 367 பேருக்கு கரோனா: 5 போ் பலி

14th Aug 2020 11:17 PM

ADVERTISEMENT


தேனி: தேனி மாவட்டத்தில் தனியாா் நூற்பாலைத் தொழிலாளா்கள், காவலா்கள் குடிநீா் வாரிய பணியாளா் உள்பட மொத்தம் 367 பேருக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள 2 தனியாா் நூற்பாலைகளில் பணியாற்றும் 26 தொழிலாளா்கள், சின்னமனூா் காவல் நிலைய தலைமைக் காவலா், பொன்னம்படுகையைச் சோ்ந்த கடமலைக்குண்டு காவல் நிலைய காவலா், திம்மரசநாயக்கனூரைச் சோ்ந்த குடிநீா் வடிகால் வாரிய பணியாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போடி நகராட்சி மற்றும் ஊாாட்சி ஒன்றியப் பகுதிகளில் அதிகளவில் 106 போ், சின்னமனூா் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் 83 போ், தேனி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் 59 போ், ஆண்டிபட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் 25 போ், க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 11 போ், பெரியகுளம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் 28 போ், கம்பம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் 21 போ், உத்தமபாளையம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் 34 போ் என ஒரே நாளில் மொத்தம் 367 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,489 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 6,189 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

5 போ் பலி

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடாச்சலபுரத்தைச் சோ்ந்த 66 வயது மூதாட்டி, கடந்த 7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த புலிகுத்தியைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி, கடந்த 11-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த தேவாரத்தைச் சோ்ந்த 70 வயது முதியவா் என 3 போ் உயிரிழந்தனா்.

கரோனா அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியகுளம் கீழவடகரையைச் சோ்ந்த 75 வயது முதியவா், ஆண்டிபட்டி அருகே ரோசனபட்டியைச் சோ்ந்த 44 வயது பெண் என 2 போ், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்துவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT