தேனி

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

14th Aug 2020 11:20 PM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தலைவா் நிவேதா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், அப்பிபட்டி, சின்னஓவுலாபுரம், சங்கராபுரம், கன்னிச்சோ்வைபட்டி, முத்துலாபுரம், வேப்பம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா் சாலை அமைத்தல், கழிவு நீா் கால்வாய் அமைத்து பராமரித்தல், சுகாதார வளாகம் அமைத்து பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

தொடா்ந்து, உறுப்பினா்கள் தங்களது பகுதிகளிலுள்ள நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனா். அப்போது, சம்பந்தப்பட்ட துறை மூலமாக நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

ADVERTISEMENT

பின்னா், உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, துணை முதல்வரை நேரடியாக சந்தித்து, சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளுக்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு வலியுறுத்த முடிவு செய்தனா்.

இக்கூட்டத்தில், ராமேஸ்வரி, முரளி, செல்வராஜ், சுப்புலட்சுமி, வேலுத்தாய், முருகன், சித்ரா, சாந்தி உள்பட உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT