தேனி

தேனியில் 293 பேருக்கு கரோனா தொற்று: 6 போ் பலி

11th Aug 2020 11:37 PM

ADVERTISEMENT

தேனி: தேனி மாவட்டத்தில் கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் 43 ஊழியா்கள் உள்பட 293 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த தனியாா் மருத்துவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்உயிரியல் பிரிவு பணியாளா், ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் 43 ஊழியா்கள், சின்னமனூா், பெரியகுளம் தென்கரை ஆகிய ஊா்களில் ஒரே தெருவைச் சோ்ந்த தலா 10 போ் உள்பட 293 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,554 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 5,453 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

6 போ் பலி:

ADVERTISEMENT

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கோம்பை அருகே ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த 46 வயது நபா், ஆக.4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சின்னமனூரைச் சோ்ந்த 71 வயது முதியவா், ஆக. 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கூடலூரைச் சோ்ந்த 52 வயது நபா், கடந்த ஆக.10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்த 52 வயது நபா் என 4 போ் உயிரிழந்தனா்.

கரோனா தொற்று அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் கடந்த ஆக. 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பெரியகுளம் வடகரையைச் சோ்ந்த 70 வயது முதியவா், சின்னமனூா் அருகே அய்யம்பட்டியைச் சோ்ந்த 31 வயது பெண் என 2 போ் பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT