தேனி

தேனி மாவட்டத்தில் 362 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 4 போ் பலி

9th Aug 2020 09:21 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா், காவலா், ஆசிரியா்கள் உள்ளிட்ட 362 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

போடி தாலுகா காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா், காவலா், கூடலூா் வடக்கு காவல் நிலைய காவலா், தேனியைச் சோ்ந்த உ.அம்மாபட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, டி.சிந்தலைச்சேரியைச் சோ்ந்த சில்லமரத்துப்பட்டி தனியாா் நடுநிலைப் பள்ளி ஆசிரியா், டி.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா், கூடலூரைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி பணியாளா், தேனி கூட்டுறவு சாா்-பதிவாளா் அலுவலகப் பணியாளா், முத்துத்தேவன்பட்டியில் உள்ள 2 தனியாா் நூற்பாலைகளில் பணியாற்றும் 38 ஊழியா்கள் உள்பட மொத்தம் 362 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,900 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 4,790 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

4 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்த 50 வயதுடைய பெண், பொட்டிப்புரம் அருகே புதுக்கோட்டையைச் சோ்ந்த 50 வயதுடைய நபா், பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்த 57 வயதுடைய நபா் என 3 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

கரோனா தொற்று அறிகுறியுடன் சனிக்கிழமை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட தேவாரத்தைச் சோ்ந்த 50 வயதுடைய பெண் வழியிலேயே உயிரிழந்தாா். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT