தேனி

வரதராஜபெருமாள் கோயிலில் இந்து முன்னணியினா் சிறப்பு வழிபாடு

6th Aug 2020 08:00 AM

ADVERTISEMENT

ராமா் கோயில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வேண்டி ஆண்டிபட்டி அருகே கதிரியகவுண்டன்பட்டி வரதராஜபெருமாள் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு மொக்கராஜ் முன்னிலை வகித்தாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை மற்றும் கோயில் கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், ராமா் பட்டாபிஷேக படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தினா். ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரன், ஒன்றிய தலைவா் கண்ணன், இளைஞா் அணி அமைப்பாளா் மனோஜ்குமாா், பொறுப்பாளா் கனகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT