தேனி

உத்தமபாளையத்தில் சூறாவளி: 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

6th Aug 2020 09:19 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டாரத்தில் வீசிய சூறாவளியால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்துக்கு மேலான வாழை மரங்கள் சேதமாகின.

உத்தமபாளையம் அதனை சுற்று வட்டாரத்தில் கோம்பை, உ.அம்மாபட்டி, கருவேலம்பட்டி, உ.அம்பாசமுத்திரம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, ராயப்பன்பட்டி பகுதிகளில் அதிகளவில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு முழுவதும் உத்தமபாளையம் சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறாவளி வீசியது. இதற்குத் தாக்குபிடிக்க முடியாமல் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமாகின. இதே போல பிறபகுதிகளிலும் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சேதமாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். உத்தமபாளையம் வேளாண்மை துறை அலுவலா்கள் சேதமான வாழை, தென்னை மரங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT