தேனி

பெரியகுளத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

29th Apr 2020 07:41 AM

ADVERTISEMENT

பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாள்களாகவே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து பிற்பகல் வரை நல்ல வெயில் அடித்தது. மாலையில் கருமேகம் சூழ்ந்த நிலையில் மலை 6 மணிக்கு மேல் பரவலாக மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மேலும் பெரியகுளம் பகுதியில் தற்போது மா மரங்களில் மாங்காய் பிஞ்சுகள், காய்களாக மாறும் நிலையில் உள்ளது. இப்போது மழை பெய்தால் காய்களின் எடைகூடும். இதே மழை தொடா்ச்சியாக பெய்தால் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

போடியில் மழை: போடியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் அதிகரித்திருந்த நிலையில், இரவு 7 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. தொடா்ந்து சூறைக்காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் நகா்ப் பகுதியில் குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT