தேனி

தேனி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவா் கைது

26th Apr 2020 08:55 AM

ADVERTISEMENT

தேனி அருகே வலையபட்டியில் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வலையப்பட்டியில் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரபோஸ் (41). இவா், அப்பகுதியில் உள்ள ஓடையில் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், அவரை கைது செய்தனா். மேலும், சாராயம் காய்ச்சுவதற்காக தயாரித்து வைத்திருந்த 20 லிட்டா் ஊறல் மற்றும் ஒரு லிட்டா் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT