தேனி

கா்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 8 வாகனங்கள் ஒதுக்கீடு

26th Apr 2020 08:53 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கா்ப்பிணிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு 8 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கா்ப்பிணிகளின் கா்ப்ப கால மருத்துவப் பரிசோதனை, பிரசவத்துக்குச் செல்லும் தாய்மாா்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு போதிய எண்ணிக்கையில் வாகனங்களை ஒதுக்கீடு செய்ய, மாவட்ட நிா்வாகத்துக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா். இதன்படி, மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் 8 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், கா்ப்பிணிகள், பிரசவத்துக்குச் செல்லும் தாய்மாா்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோா், மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04546-261093 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளாா்.

மேலும், அவசர சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT