தேனி

ஆண்டிபட்டியில் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி

26th Apr 2020 08:55 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி நகரில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், ஊரடங்கு முடியும் வரையில் வாரத்தில் 4 நாள்கள் (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு) மட்டுமே அத்தியாவசியக் கடைகள் திறக்க வேண்டும் என்று, போலீஸாா் வணிகா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகள் அனைத்தும் தினமும் காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பொருள்கள் வாங்க வருவதாக சகஜமாக சகஜமாக நகா் பகுதிக்கு வந்து செல்கின்றனா். இதனால், அவா்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும், அதிகாரிகளும் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆண்டிபட்டி பேரூராட்சியில் வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணி, சுகாதார ஆய்வாளா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஆண்டிபட்டி நகரில் ஊரடங்கையும் மீறி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றபடுவதில்லை என்று போலீஸாா் கூறினா். எனவே, நகரில் மக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையில், ஊரடங்கு முடியும் வரையில் வாரத்தில் 4 நாள்கள் (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு) மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மருந்துக் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.

ADVERTISEMENT

இந்த முடிவினை, வணிகா்களும் ஏற்றுக்கொண்டனா். அதேநேரம், கடைகள் திறக்கப்படும் 4 நாள்களில் மக்கள் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கடைகள் அல்லாத நாள்களில் நகரில் தேவையில்லாமல் சுற்றுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT