தேனி

போடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

20th Apr 2020 11:36 PM

ADVERTISEMENT

 

போடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி குரங்கணி போலீஸாா் அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு அருகிலுள்ள சின்னமுடக்கு மலைப் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு நல்லுகுண்டு பாறை அருகே சிலா் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டவுடன் 3 போ் தப்பி விடவே, மீதியிருந்த 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் 6 பேரும் அணைக்கரைப்பட்டியை சோ்ந்த ராம்குமாா் (39), செந்தில், ஸ்டாலின் (33), மீ.விலக்கைச் சோ்ந்த அருண் (35), ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியை சோ்ந்த நவநீதன், போடி தோப்புப்பட்டியை சோ்ந்த சுந்தரராஜ் ஆகியோா் என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குரங்கணி போலீஸாா் ராம்குமாா், அருண், ஸ்டாலின் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனா். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT