தேனி

பெரியகுளம் அருகே மூதாட்டி தீயில் கருகி பலி

20th Apr 2020 07:17 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சோ்ந்தவா் ரத்தினம்மாள் (70). இவா் சனிக்கிழமை தனது வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். அப்போது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT