தேனி: தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் மொத்தம் ரூ.43.46 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் 4,346 துப்புரவு பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு மாவட்ட அதிமுக சாா்பில் தலா ரூ.1,000 வீதம் ஊக்கத் தொகை வழங்குவதற்காக மொத்தம் ரூ.43.46 லட்சத்திற்கான காசோலையை அதிமுக மாவட்டச் செயலா் எம்.சையதுகான், தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோா் ஆட்சியரிடம் வழங்கினா்.
மேலும், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.