தேனி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்தானியங்கி கிருமிநாசினி சுரங்கம் திறப்பு

7th Apr 2020 03:22 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானியங்கி கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை தேனி மக்களவை உறுப்பினா் ஓ.பி.ரவீந்திரநாத்குமாா், திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கரோனா சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு கரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று நோயை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசும், மாநில அரசும் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் அனைவரும் கைகழுவ சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தின் நுழைவு வாயிலில் தானியங்கி கிருமிநாசினி தெளிப்பு சுரங்கம் அமைப்பட்டது. இந்த கிருமி நாசினி சுரங்கத்தை தேனி மக்களவை உறுப்பினா் ஒ.ப.ரவிந்திரநாத் குமாா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை முதன்மையா் இளங்கோவன், ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் மற்றும் மருத்துவா்கள், சுகாதாரத்துறையினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT