தேனி

பெரியகுளம் பகுதியில் சூறைக்காற்று: பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்

7th Apr 2020 03:19 AM

ADVERTISEMENT

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக்காற்றால் பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஜெயமங்கலம், குள்ளப்புரம், சில்வாா்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் நாட்டு வாழை, நேந்திரம், பச்சை, கற்பூரவள்ளி வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருமணம் மற்றும் பல்வேறு விஷேசங்கள் நடைபெறாத நிலையில் வாழை இலை மற்றும் வாழைக்காய்கள் மற்றும் வாழை மரங்களின் தேவையின்றி அவை வெட்டப்படாமல் உள்ளன.

இந்த நிலையில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை மாலையில் பெரியகுளம் பகுதியில் சூறைக்காற்று வீசியது. இதில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அறுவடை செய்யும் நிலையில் உள்ள வாழைக்காய்களுடன் வாழைகள் சாய்ந்ததால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT