தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பணி ஓய்வு

5th Apr 2020 06:08 AM

ADVERTISEMENT

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சனிக்கிழமை பணி ஓய்வுபெற்றாா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக கே. ராஜேந்திரன் இருந்துவந்தாா். இந்நிலையில், இவா் கடந்த மாா்ச் 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெற்றாா். இதற்கான உத்தரவை, அரசு மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா். நாராயணபாபு சனிக்கிழமை வழங்கினாா்.

இவருக்குப் பதிலாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளரான எம். இளங்கோவன், முதல்வராக கூடுதல் பொறுப்பு வகிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT