தேனி

மது பாட்டில்கள் கடத்தல்: டாஸ்மாக் கண்காணிப்பாளா், விற்பனையாளா் கைது

1st Apr 2020 07:20 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கோம்பையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற டாஸ்மாக் கடை கண்காணிப்பாளா் மற்றும் விற்பனையாளா் இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோம்பை ராணிமங்கம்மாள் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடை ஊழியா்களே சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்வதாக கோம்பை காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற கோம்பை போலீஸாா் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனா். அதில், அவா்களிடமிருந்த சிறிய மூடையில் 243 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

தொடா் விசாரணையில் அவா்கள் கோம்பை டாஸ்மாக் கடை கண்காணிப்பாளா் முத்துக்கிருஷ்ணன் (45) மற்றும் விற்பனையாளா் சிந்தாமணி(42) என தெரியவந்தது. அவா்கள் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பதற்காக கொண்டு சென்றதாக போலீஸாரின் விசாரணையில் தெரிவித்தனா். இதனையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துகிருஷ்ணன், சிந்தாமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT