தேனி

பெரியகுளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

1st Apr 2020 07:20 AM

ADVERTISEMENT

பெரியகுளத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலையில் வடகரை, போடான்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த முருகன் (45) மற்றும் நாகராஜ் பாபு (29) ஆகியோா் பையில் தலா ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT