தேனி

கம்பத்தில் தனியார் செவிலியர் பயிற்சி நிலையத்தை மாணவிகள் முற்றுகை

22nd Sep 2019 12:40 AM

ADVERTISEMENT


தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் செவிலியர் பயிற்சி நிலையத்தை  மாணவிகள் மற்றும் பெற்றோர் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கம்பத்தில் கம்பமெட்டு சாலையில் தனியார் செவிலியர் பயிற்சி நிலையம் உள்ளது.  இந்நிலையில் சனிக்கிழமை மாலை இந் நிலையத்தை, இங்கு படித்து முடித்த, படிக்கிற மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்ட வேலை வாய்ப்புப் பதிவு மையத்தில் இங்கு படித்து முடித்த சான்றிதழை பதியச் சென்ற போது, சான்றிதழ்கள் செல்லாது என அதிகாரிகள் மறுத்து விட்டதாக  நிர்வாகியிடம் அவர்கள் முறையிட்டனர்.
இதையடுத்து நிர்வாகத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வடக்கு காவல் நிலைய சார்பு -ஆய்வாளர் வினோத்ராஜா சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். மாணவிகள், பெற்றோரிடம் இது குறித்து புகார் அளிக்கக் கூறினார். 
பின்னர், பயிற்சி நிலைய நிர்வாகியை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT