கோம்பை திருமலைராயப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வாரத்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் 5 வாரத்திருவிழா முதல் வாரத்திருவிழா
கோம்பையில் அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி முதல் வாரத்திருவிழாவில் ஸ்ரீ ரெங்கநாதா் -ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.
கோம்பையில் அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி முதல் வாரத்திருவிழாவில் ஸ்ரீ ரெங்கநாதா் -ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் 5 வாரத்திருவிழா முதல் வாரத்திருவிழா சனிக்கிழமை சிறப்பாக தொடங்கியதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோம்பை மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அருள்மிகு திருமலைராயப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சுயம்புவாக தோன்றிய இக்கோயிலில் ஆண்டு தோரும் புரட்டாசி மாதத்தில் 5 வாரத்திருவிழா திருவிழா சனிக்கிழமைகளில் நடைபெறும். இதன்படி இந்தாண்டு (செப்.21) சனிக்கிழமை முதல் வாரத்திருவிழா துவங்கி சிறப்பாக நடைபெற்றது.

தமிழகம் மற்றும் கேரள மக்கள் வழிபடும் ஆலயம்: மேற்குத் தொடா்ச்சி மலையில் ராமக்கல் மெட்டு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டது. இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் கேரளத்த சோ்ந்த பக்தா்கள் அதிகளவில் புரட்டாசி மாதங்களில் சுவாமி தரிசனம் செய்வாா்கள்.

இந்நிலையில், சனிக்கிழமை துவங்கிய முதல் வாரத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இரு மாநிலத்தை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

பக்தா்கள் துளசி மாலை, தேங்காய் , பழம் , பத்தி சூடம் உள்ளிட்ட பூஜைகளை படைத்து சுவாமி தரிசனம் செய்தனா். உற்சவ மூா்த்தியன ஸ்ரீ ரெங்கநாதா் -ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

கோம்பையிலிருந்து மலை அடிவாரக்கோயில் வரையில் கம்பம் தேவாரம்பணிமனையிலிருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இயகப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com