பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பஞ்சம்மாள் (38) என்பவருக்கும், அவர்களின் உறவினர் முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முருகன் (46) மற்றும் கார்த்தி (30) இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி, பஞ்சம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பஞ்சம்மாள் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து முருகன் மற்றும் கார்த்தி இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.