தேனி

தேனியில் கோ-ஆப்டெக்ஸ் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

17th Sep 2019 07:39 AM

ADVERTISEMENT

தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் உள்ள  கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது.
தேனி, கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கி வைத்து ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறியது: கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தேனி, கோ-ஆப் 
டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.82.53 லட்சத்திற்கு ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப் டெக்ஸ் மதுரை மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், திட்ட மேலாளர் எஸ்.பாடலிங்கம், கிளை மேலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT