தேனி

பெரியகுளம் அருகே  பைக்குகள் மோதியதில் 5 பேர் காயம்

13th Sep 2019 08:42 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில், 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக, போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
       தேவதானப்பட்டியைச் சேர்ந்த ராம் மனோஷ் (25). இவரும், பவுன்ராஜ் என்பவரும் சில்வார்பட்டியிலிருந்து தேவதானப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர். டி.வாடிப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது, சில்வார்பட்டியைச் சேர்ந்த சுந்தரமகாலிங்கம் (25) என்பவர் இரு சக்கர வாக
னத்தை அதிவேகமாக ஓட்டி வந்து மோதியுள்ளார்.  
     இதில், ராம் மனோஷ், சுந்தரமகாலிங்கம் மற்றும் இவரது வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பெருமாள், பூவலிங்கம், காளிமுத்து ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். 
     இச்சம்பவம் குறித்து, தேவதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT