தேனி

கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடியில் இயந்திர நடவுக்கு விவசாயிகளிடம் ஆர்வமில்லை

10th Sep 2019 09:01 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இயந்திர நடவு முறைக்கு விவசாயிகள் ஆர்வமின்றி இருப்பதால் இலக்கை எட்ட முடியாமல் வேளாண்துறையினர் தவித்து வருகின்றனர்.
முல்லைப்பெரியாறு நீர்பாசன  மூலமாக காலதாமத்துடன் முதல் போக நெற்பயிர் விவசாயம் கம்பம் பள்ளத்தாக்கில்  நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் இறுதியில் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டடு 14,707  ஏக்கர் பரப்பளவில் 
நெற்பயிர் விவசாயத்திற்கு நாற்றாங்கால் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. 
தற்போது, விவசாயிகள் நெற்பயிர் சாகுபடிக்காக நாற்றாங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில்,  இயந்திர நடவு முறையை மேற்கொள்ளும் வகையில் ஏக்கருக்கு ரூ.2000 மானியம் தருவதாக கூறி  வேளாண்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த விவசாய முறையில் ஆர்வமில்லாமல் பாரம்பரியமாக மேற்கொள்ளும்  நடவுப் பணிகளுக்கு தேவையான முறையில் நாற்றாங்காலை அமைந்து வருகின்றனர். 
இதன் மூலமாக வேளாண்துறையினர்  திருத்திய நெல் சாகுபடி முறையில் நிர்ணையிக்கப்பட்ட 800 முதல் 900 ஹெக்டேர் பரப்பளவிற்கான இலக்கை எட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியது: இயந்திர நடவு முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதால் பிரத்தியேக முறையில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இந்த முறையில் வளரும் நாற்றுக்கள்  காலம் வெறும் 15 நாள்களே. ஆனால் இங்குள்ள நிலத்தின் தன்மை காலநிலை அவ்வப்போது ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணத்திற்கு ஏற்பட நாற்றின் வளர்ச்சிக்கு குறைந்தது 28 நாள் வரை தேவை. 
அவ்வாறு இருந்தால் மட்டுமே மகசூல் கிடைக்கும். உரிய மகசூல் கிடைக்கவில்லை என்பதால் பெரும்பான்மையான விவசாயிகள் இயந்திர நடவு முறையை கைபிடிக்க முன்வருவதில்லை. எனவே, இயந்திர நடவிற்காக ஒதுக்கீடு செய்து வழங்கப்படும் மானியத்தை வேறு ஏதாவது பயனுள்ள திட்டத்திற்கு வழங்கினால் விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு இருக்கும் என்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT