தேனி

தேனியில் முதுகு தண்டுவடம் பாதிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

7th Sep 2019 02:40 AM

ADVERTISEMENT

தேனியில் முதுகுத் தண்டுவடம் பாதிப்பு தினத்தை முன்னிட்டு, முதுகுத் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி காவல் நிலையம் முன்பாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா இந்த ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். பெரியகுளம் சாலை, மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில், போக்குவரத்து விதிகள், பாதுகாப்பான பயணம், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் ஆகியன குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி முதுகுத் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பினர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT