தேனி

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

7th Sep 2019 02:42 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கம்பம், சுப்பிரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் மகன் ஈஸ்வரன் (23),  பிச்சைமணி மகன் பாரதி(22). கட்டடத் தொழிலாளியான ஈஸ்வரன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதற்கு பாரதி உடந்தையாக இருந்ததாகவும், இருவரையும் கடந்த 2015, அக்டோபர் 11-ஆம் தேதி கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். 
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 
வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.கீதா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஈஸ்வரன்,  அதற்கு உடந்தையாக இருந்த பாரதி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT