தேனி

கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

7th Sep 2019 02:40 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் வியாழக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.  
இக்கல்லூரி நிறுவனச் செயலர் என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணைச் செயலர் ரா. வசந்தன், முதல்வர் ஜி. ரேணுகா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பேராசிரியைகள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
முகாமில், வேலைவாய்ப்பு ஆலோசகர் மீனாட்சி வெங்கடேசன் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ள தனியார் நிறுவனங்கள், மத்திய-மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வது உள்ளிட்டவை குறித்துப் பேசினார். இதில், கல்லூரியின்  இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, முகாம் பொறுப்பாளர் சமந்தா வரவேற்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT