தேனி

கம்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு சிக்கியது

7th Sep 2019 02:44 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம்  கம்பம் பகுதியில் பல மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை மாணவர்கள் உதவியுடன் வனத்துறையினர் வெள்ளிக்கிழமை பிடித்தனர்.
கம்பம் நகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் கருமந்தி (குரங்கு ) ஒன்று, குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதோடு, பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள் புகாரின் பேரில் வனத்துறையினர் குரங்கு நடமாடும் பகுதியில் கூண்டு வைத்தும், குரங்கு சிக்கவில்லை. 
இந்நிலையில் கம்பம் ஏல விவசாய மேல்நிலைப்பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வந்த  கருமந்தி இங்குள்ள சரஸ்வதி கோயிலுக்குள் நுழைந்தது. இதனை பார்த்த மாணவர்கள்  கோயில் கதவை பூட்டி வனத்துறைக்கு தகவல் கொடுக்கவே, வனத்துறையினர் குரங்கை மீட்டு, சுருளி வனப்பகுதியில் விட்டனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT