தேனி

அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை: செப்.16-க்குள் விண்ணப்பிக்கலாம்

7th Sep 2019 02:41 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கைக்கு செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆண்டிபட்டி அருகே எஸ்.ரங்கநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டம், பொது தனியார் கூட்டமைப்புத் திட்டம் சார்பில் கணினி, தையல் தொழில் நுட்பம் ஆகிய பிரிவுகளில் ஓராண்டு பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி இயந்திர மின்னணுவியல், குளிப்பதனம் ஆகிய பிரிவுகளில் 2 ஆண்டு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவிகள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 14 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியில் சேருபவர்களுக்கு வருகைப் பதிவின் அடிப்படையில் மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். அரசு சார்பில் இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மிதிவண்டி, மடிக் கணினி, சீருடை, புத்தகம், வரைபடக்கருவி வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவிகள் எஸ்.ரங்கநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT