தேனி

தேனி மாவட்டத்தில்  நல்லாசிரியர் விருதுக்கு  9 பேர் தேர்வு

4th Sep 2019 07:32 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 2019 ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெறுவதற்கு 9 ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 அனுப்பபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மணி, ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இ.மதலைமுத்து, கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கோ.ரேவதி, ஸ்ரீரெங்கபுரம் எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நா.மகாலட்சுமி, ஓடைப்பட்டி ஸ்ரீநந்தகோபால் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.நாவரசி, திம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் க.ராமகிருஷ்ணன், காக்கிவாடன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரா.விஜயராஜ், வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளி கைத்தொழில் ஆசிரியர் ப.உமாபதி, முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் கு.முருகன் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
இவர்களுக்கு சென்னையில், செப்டம்பர் 5 இல் அரசு சார்பில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கூறினர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT