தேனி

தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

4th Sep 2019 07:30 AM

ADVERTISEMENT

தேனியில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
தேனி, அன்னஞ்சி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டன. 
தேனி, பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோயிலில் தொடங்கி, பெரியகுளம் சாலை, நேருசிலை, மதுரை சாலை வழியாக அரண்மனைப்புதூர் வரை ஊர்வலம் நடைபெற்றது. அரண்மனைப்புதூர், முல்லைப்பெரியாற்றில் சரண கோஷத்துடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 
கோட்டூர், தப்புக்குண்டு, தர்மாபுரி, தாடிச்சேரி, பூமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தேனி-கம்பம் சாலையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வீரபாண்டி, முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.  
இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் முருகன், பொதுச் செயலர் உமையராஜ், இந்து எழுச்சி முன்னனி நிறுவனர் 
பொன்.ரவி, மாவட்டத் தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
கம்பம்:  தேனி மாவட்டம் கம்பம் பிரதான சாலையில், உள்ள அரசமரம் வெற்றி விநாயகர் திடலில் தொடங்கிய, விநாயகர் சதுர்த்தி, விஸர்ஜன ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.முருகேசன் தலைமை வகித்தார்.  
அமைப்பாளர் கணேசன்,  செயலாளர் சங்கிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் லோகநாதன் வரவேற்றார். பழைய பேருந்து நிலையம், மாரியம்மன் கோயில் சாலை, வ.உ.சி., திடல், பூங்கா சாலை, உழவர் சந்தை, அரசு மருத்துவமனை, நகராட்சி சாலை, நெல்லுகுத்தி புளியமரம், நாட்டுக்கல், சுப்ரமணியர் கோயில், தங்க விநாயகர் கோயில், கள்ளர் பள்ளி, வடக்கு காவல் நிலையம், ஏ.கே.ஜி. திடல், போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை வழியாக சென்று சுருளிப்பட்டி முல்லையாற்றில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புடன் 108 சிலைகளை கரைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வி.பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு செய்தனர்.
ஆண்டிபட்டி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிபட்டி நகரில் 78 விநாயகர் சிலைகளை வாகனங்களில்  ஊர்வலமாக கொண்டு சென்று  வைகை ஆற்றில் கரைத்தனர்.
  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு அந்த அமைப்பின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர்  எஸ்.பி.எம். செல்வம் தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையாஜி சிறப்புரையாற்றினார்.
 மாவட்டச் செயலாளர் உமையராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் முருகன்ஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  ஆண்டிபட்டி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து 43 விநாயகர் சிலைகள் மினிவேன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு, ஆண்டிபட்டியில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. 
இதனையடுத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு  வைகை அணைப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் குமார், வேல்முருகன், ரமணி கணபதி,  வெங்கடேசன், இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவர் கண்ணன், ஒன்றியச் செயலாளர்கள் ஈஸ்வரன், பாண்டியராஜன், அன்னையர் அணியைச் சேர்ந்த ரம்யா, சுந்தரி, ஜெயா, சந்திரா, மகராசி, நிர்வாகிகள் முருகேசன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் வேல்முருகன் வரவேற்புரையாற்றினார்.
ஒன்றியத் தலைவர் வைகை பாண்டியன், ஒன்றியச் செயலாளர் நாகராஜ், ஒன்றிய பொறுப்பாளர் நேதாஜி, நகரச் செயலாளர் எஸ்.பாண்டி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 35 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை அணையில் கரைக்கப்பட்டன.
ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர். 

ஜமாத்தார் வரவேற்பு
ஆண்டிபட்டியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாப்பம்மாள்புரத்தில் உள்ள பள்ளிவாசல் முன்பு இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு ஜமாத்தார்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். 
பின்னர் ஜமாத்தார்களுக்கு இரு அமைப்பின் சார்பிலும் சால்வை அணிவிக்கப்பட்டது. இச்செயல் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இருந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஊர்வலத்தின் போது ஒருசில இடங்களில் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டதையடுத்து போலீஸார் அவர்களை விரட்டியடித்தனர். மேலும் பிரச்சனையில் ஈடுபட்டதாக காமாட்சிபுரம், சுந்தரராஜபுரம், பிச்சம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT