தேனி

சின்னமனூரில் சின்னவெங்காயம் விளைச்சல் அதிகரிப்பு: இடைத்தரகர்களின் விலை குறைப்பால் விவசாயிகள் பாதிப்பு

4th Sep 2019 07:31 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூரில் சின்னவெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் இடைத்தரகர்களால் போதுமான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சின்னமனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முத்துலாபுரம், வேப்பம்பட்டி, எரசக்கநாயக்கனூர், 
ஓடைப்பட்டி, சின்னஒவுலாபுரம் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. 
இதில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கோம்பை, தேவாரம்,  போடி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் வாரச்சந்தை மூலமாக சிறிய வியாபாரிகளிடம் பொதுமக்கள் நேரடியாக வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.  
விலையை நிர்ணயம் செய்ய முடியாத விவசாயிகள்: விளை விக்கப்படும் பொருள்களுக்கு விவசாயி விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. மாறாக  இடைத்தரகர்களான மொத்த வியாபாரிகளே மக்களுடைய தேவைக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்கின்றனர். விளைச்சல் குறைந்து தேவை அதிகமாகும் போது விலை உயர்வாகவும், உற்பத்தி உயர்ந்து வரத்து அதிகமானால் விலையை  இடைத்தரகர்கள் குறைத்தும் விடுவதாக விவசாயிகள் புகார் தெவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியது: சின்ன வெங்காயத்தின் விலை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக    1 கிலோ ரூ.70 வரையில் விற்பனையானது. தற்போது விவசாயிகளிடமிருந்து சின்னவெங்காயத்தின்  வரவு அதிகமானதால் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு ரூ.40 முதல் ரூ.50 வரையில் விற்பனையாகிறது.
 ஆனால், சின்னமனூரில் விவசாயிகளிடம் ரூ.20 க்கு வாங்கிச் சென்று வெளிச்சந்தையில் ரூ. 50 வரையில் வியாபாரிகள் விற்கின்றனர்.  
இதன் காரணமாக விவசாயிகள் தெரிந்தே இந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, விளை பொருளுக்கான அடிப்படை விலையை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயத் தொழில் சிறப்பாக நடைபெறும். 
இல்லையெனில், இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நிலைமை தொடரும் என்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT