தேனி

ஆசிரியர் தினம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு  கட்டுரை, கவிதை, சிறுகதை போட்டி அறிவிப்பு

4th Sep 2019 07:59 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களுக்கு கட்டுரை, கவிதை மற்றும் சிறுகதை போட்டி நடைபெற உள்ளது.
 இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈ.ஜெகநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
5 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு "தேர்வும் நானும்' என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு "நான் விரும்பும் வகுப்பறை' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. 
 பள்ளி ஆசிரியர்களுக்கு "என்னமோ நடக்குது, மர்மமாக இருக்குது' என்ற தலைப்பிலும், கல்வி ஆர்வலர்களுக்கு "அரசுப் பள்ளிகள் இணைப்பும் அடைப்பும்' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.  
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, "நின்னா தேர்வு, நடந்தா தேர்வு' என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், கல்வி பொதுத் தலைப்பில் அனைத்துப் பிரிவினருக்கும் சிறுகதைப் போட்டி நடைபெறும். 
கட்டுரைகள் 3 பக்கங்களுக்கும், கவிதை 20 வரிகளுக்கும், சிறுகதை 4 பக்கங்களுக்கும் மிகாமலும், சொந்தப் படைப்பாகவும்  இருக்க வேண்டும்.
படைப்புகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின விழா போட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,  5-தெற்குத்தெரு, கோட்டூர்-625 534 என்ற முகவரிக்கு தபால் மூலமும், ‌t‌n‌s‌f.‌k​a‌l‌v‌i‌k‌u‌l‌u@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற மின்னஞ்சல் மூலமும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். போட்டி முடிவுகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணைய தளத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்படும்.
போட்டியில்  பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 
பரிசு பெற்ற படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளியாகும் கல்வி மாத இதழில் பிரசுரிக்கப்படும் என்று அறிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT