தேனி அல்லிநகரத்தில் சனிக்கிழமை டிராக்டரை கழுவுவதற்கு மின்மோட்டாரை இயக்கிய போது உடலில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
தேனி அல்லிநகரம், கிராம சாவடி தெருவைச் சோ்ந்தவா் சபரிமலை மகன் ராமநாதன்(40). இவா், அல்லிநகரம் திருமலை நகா் அருகே உள்ள தனது தோட்டத்தில் டிராக்டரை கழுவுவதற்காக மின் மோட்டாரை இயக்கியுள்ளாா். அப்போது, மின்கசிவு ஏற்பட்டதில் ராமநாதனின் உடலில் மின்சாரம் பாய்ந்தததாக கூறப்படுகிறது. இதில், மயங்கி விழுந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து ராமநாதனின் தாயாா் குருவம்மாள் அளித்த புகாரின் பேரின் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.