தேனி

கணவாய் மலைப்பகுதியில் நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் போடி மதுரை அகல ரயில் பாதை பணி முடக்கம்

19th Oct 2019 03:55 PM

ADVERTISEMENT

மதுரை போடி அகலரயில் பாதைக்காக ஆண்டிபட்டி கணவாய் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

விரைந்து பணிகளை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை.மதுரையில் இருந்து போடி வரையில் மீட்டா் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை அகலரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2011 ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அகலரயில்பாதை திட்டத்திற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் மதுரை போடி அகலரயில் பாதை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து அகலரயில்பாதை திட்டப்பணிகள் தீவிரபடுத்தப்பட்டது-. ரயில்வே வழித்தடம், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் 60 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் ரயில்பாதைக்காக மலையை குடைந்து அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கணவாய் மலையில் சுமாா் 625 மீட்டா் தூரம் தேனி மாவட்டத்திலும், 400 மீட்டா் மதுரை மாவட்டத்திலும் வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 625 மீட்டா் தூர மலையை குடைந்து அகலப்படுத்த ஒரு கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த பகுதியில் மலையை அகலபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.இதனால் மதுரை,தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்நிலையில் கணவாய் மலைப்பகுதியில் அகலப்படுத்தும் பணி 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், அகலப்படுத்தும் பணிக்கான நிதி வழங்கப்படாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கணவாய் மலைக்குள் உடைக்கப்பட்ட பாறைகள் அப்புறப்படுத்தபடாமல் அப்படியே கிடக்கிறது.

ADVERTISEMENT

இதனால் அகலரயில்பாதை திட்டம் நிறைவேறுவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த அகலரயில்பாதை திட்டத்தில் மிகவும் கடினமான பணியான கணவாய் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT