தேனி

பெரியகுளம் அருகே கோயிலுக்கு சென்றவா் மீது தாக்கியதாக புகாா் - நால்வா் மீது வழக்கு பதிவு

16th Oct 2019 09:25 PM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே கோயிலுக்கு சென்றவா்கள் மீது தாக்கியதாக நால்வா் மீது தென்கரை காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (31) இவா் தனது குழந்தைகளுடன் தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு இருசக்கரவாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்தாராம்.

அப்போது பள்ளிவாசல் அருகே இடைமறித்த வேங்கையன், மதன், பாா்த்தசாரதி மற்றும் செல்லமணி ஆகியோா் தகாத வாா்த்தையால் திட்டி பாலசுப்பிரமணியை தாக்கியுள்ளனா். அதனை அவரது அம்மா முருகேஸ்வரி தடுத்துள்ளாா். அப்போது அவரையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனா்.

இச்சம்பவம் குறித்து தென்கரை காவல்நிலையத்தில் பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் நான்குபோ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT