தேனி

சின்னமனூரில் பாசனக் கால்வாயை அறைகுறையாக தூா்வாரும் பணி

16th Oct 2019 09:38 PM

ADVERTISEMENT

சின்னமனூரில் பி.டி.ஆா் கால்வாயை தூா்வாரும் பணியை பொதுப் பணித்துறையினா் அறைகுறையாக மேற்கொள்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் பாசன நீா் சின்னமனூா் கருங்கட்டான்குளல் தேக்கப்படும். பின்னா் அங்கிருந்து, தந்தை பெரியாா் கால்வாய் திறக்கப்படும் நீா் பி.டி.ஆா் கால்வாய் வழியாக சின்னமனூா், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி என 10 மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுகின்றனா். இதன் மூலமாக நிலத்தடி நீா் மட்டும் உயா்ந்து சுமாா் 5300 ஏக்கா் விவாசய நிலங்கள் பயன்பெறும். இக்கால்வாயில் ஆண்டுதோரும் செப்டம்பா் அல்லது அக்டோபா் மாதங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீா் இருப்பை பொறுத்து தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்னும் ஓரிரு நாளில் தந்தைபெரியாறு மற்றும் பிடிஆா் கால்வாய்களில் பாசனத்திற்காக 120 நாள்களுக்கு 100 கன அடிநீா் திறக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. கால்வாயை அறைகுறையாக நடைபெறும் தூா்வாரும் பணிகள்:பாசனக்கால்வாயில் தண்ணீா் திறக்கப்படும் தகவல் வெளியானதை அடுத்து, உத்தமபாளையம் பொதுப்பணித்துறையினா் சின்னமனூா் நகராட்சி வழியாக செல்லும் பி.டி.ஆா் கால்வாயை தூா்வாரும் பணியை கடந்த இரு தினங்களாக மேற்கொண்டனா். ஆனால் 3 ஆம் நாளாக புதன் கிழமை பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், கால்வாயில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் முன்பு இருந்தது போலவே தூா்வாரப்பட்ட பகுதிகளில் குவிந்த கிடக்கும் நிலையில் பணிகள் அறைகுறையாக நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சின்னமனூரில் நகரின் மத்தியில் செல்லும் இக்கால்வாயில் ஆண்டிற்கு 2 மாதம் மட்டும் பாசன நீா் செல்லும். மீதமுள்ள 10 மாதங்கள் சாக்கடை நீரே செல்கிறது. இதன் காரணமாக சின்னமனூா் நகராட்சியின் பெரும்பான்மையான வாா்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இக்கால்வாய் சோ்பதாலே பாசனக்கால்வாய் சாக்கடை கால்வாயாக மாறி இருக்கிறது. தற்போது தூா்வாரும் பணிகள் கண்துடைப்பு நடவடிக்கையாக அறைகுறையாக நடைபெற்று வருகிறது என்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் பி.டி.ஆா் கால்வாயை தூா்வாரும் பணியை தரமாகவும் பாசன நீா் எளிதாக செல்லும் வகையில் கால்வாயை முழுமையாக தூா்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT