தேனி

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

16th Oct 2019 08:11 PM

ADVERTISEMENT

தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் இன்று நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டத் தலைவா் எஸ்.நிலவழகன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் பேயத்தேவன், மாவட்டச் செயலா் ஜெயபாண்டி, சிஐடியு மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் முகமது அலி ஜின்னா, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT