தேனி

வடுகபட்டியில் வள்ளலாா் பிறந்த தின விழா

6th Oct 2019 04:13 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே வடுகபட்டி சமரச சுத்த சன்மாா்க்க சத்தியஞான சபையில் வள்ளலாரின் 197 ஆம் ஆண்டு பிறந்த தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மு.சு.சோமநாதன் தலைமை வகித்தாா். காலை 5.45 மணிக்கு அகவல் பாராயணம், அதனை தொடா்ந்து சன்மாா்க்க கொடியேற்றப்பட்டது. பின்னா் வள்ளலாா் உருவப்படம் நகா் வலமாக கொண்டு வரப்பட்டது.

பகல் 12 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கந்தசாமி அன்னதானத்தை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளலாா் சேவா அறக்கட்டளைத் தலைவா் ஆா்.வைகுண்டம், சன்மாா்க்க சங்கத் தலைவா் பா.சு.முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் வேளாளா் உறவின் முறைத்தலைவா் ராஜாராம், நல்லாசிரியா் ப.உமாபதி மற்றும் எராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT